G.G.Rajvardhanan Buddhist:
புற்றுநோய் மருத்துவர்களாகிய எங்களுக்கே திக்கென்றுதான் இருந்தது இந்த சிறுவனை பார்த்ததும். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களாக இருக்கும் நாங்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்து எங்கள் மருத்துவமனைக்கு வந்த இந்த சிறுவனை கண்டு மனம் கலங்கி போனோம். புற்றுநோய் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன நம் நாட்டில். மனிதனை பாதிக்கும் மிக கொடிய நோய்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறது புற்றுநோய். ஆனாலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே குறைவாக உள்ளது என்பது தான் உண்மை. ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகாததும், தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளாததும், பரிசோதனைகள் செய்து கொள்ள பயப்படுவதும் புற்றுநோய் சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. எனவே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். புற்றுநோயின் தீவிரத்தை உணர்ந்து, உலக சுகாதார மையமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ம் தேதியை உலக புற்றுநோய் தினமாக (World Cancer Day) அறிவித்து பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. மேலும், பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த வகையில், திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையும் தன் பங்குக்கு உலக புற்றுநோய் தினத்தன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் துவங்கிய ஹர்ஷமித்ரா மருத்துவமனை, ஆண்டுதோறும் பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினத்தன்று நடத்திய நிகழ்ச்சிகள் விவரம்: 2011: விழிப்புணர்வு பேரணி, காவல்துறை ஆணையர் உயர்திரு.ரூபேஷ் குமார் மீனா IPS அவர்களது தலைமையில் நடைபெற்றது. 2012: விழிப்புணர்வு பேரணி, காவல்துறை அதிகாரி திருமதி. லலிதா லட்சுமி IPS, அவர்களது தலைமையில் நடைபெற்றது. 2013: கவிஞர். நந்தலாலா அவர்கள் தலைமையில், “புற்றுநோய் ஒழிப்புக்கு தடையாய் இருப்பது, மக்களின் அறியாமையா அல்லது அலட்சியமா” என்ற தலைப்பில் நகைச்சுவை கலந்த பட்டி மன்றம். 2014: கவிஞர். நந்தலாலா அவர்கள் தலைமையில், பிஷப் ஹீபர் பள்ளியில், சூரியன் பண்பலை வானொலியுடன் இணைந்து, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு பட்டிமன்றம். 2015: மக்களின் கவனத்தை ஈர்த்து புற்றுநோய் பற்றிய செய்தியை கொண்டு சேர்க்கும் நூதன யுக்தியாக, தேவர் ஹாலில், கிரேஸி மோகன் அவர்களது “சாக்லேட் கிருஷ்ணா” என்னும் நகைச்சுவை நாடகம். 2016: கவிஞர் நந்தலாலா அவர்களது தலைமையில், “புற்றுநோய் தடுப்பில் தடையாக இருப்பது தனி மனித அறியாமையா? அமைப்புகளின் போதாமையா?” பட்டிமன்றம். 2017: கவிஞர் நந்தலாலா அவர்களது தலைமையில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில், புற்றுநோய் விழிப்புணர்வு அதிக அளவில் தேவைப்படுவது ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா என்ற தலைப்பில் பட்டி மன்றம். 2018: பிப்ரவரி 2ம் தேதி மாலை, திருச்சி தேவர் ஹாலில், மாநில அளவில் நடைபெற்ற ஹர்ஷமித்ரா புற்றுநோய் வினாடி வினா 2018 போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். மேலும், முழுவதும் மருத்துவர்களே பாடகர்களாக பங்கேற்கும் ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி, ‘டாக்டர்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ நடைபெறவுள்ளது. அனைவரும் வாரீர். அனுமதி இலவசம். 2018 ம் ஆண்டின் உலக புற்றுநோய் தின முழக்கம்: நம்மால் முடியும்! என்னால் முடியும்! ஆம். புற்று நோயிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காப்பாற்ற நம்மால் முடியும். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு பெறுவோம். – பொது நலன் கருதி: ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி.