சட்டக்கல்லூரியில் மரு.சசிப்பிரியா கோவிந்தராஜன் அவர்களின் புற்றுநோய்க்கெதிரான உரை

03/02/ 2023 அன்று உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 தேதியை முன்னிட்டு எங்களது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திருமதி பி. சசிபிரியா கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி காஜாமலையில் அமைந்துள்ள சட்ட கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்திற்கான பேருரை நிகழ்த்தினார். இந்த கல்லூரியில் சட்டத்துறையில் பயின்று வரும் 80 மாணவிகள், 20 சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆக 100 பேர் கலந்து கொண்டனர். புற்றுநோய் கதிர் இயக்கத் துறையில் தங்க மெடல் பெற்ற மருத்துவர் அவர்கள் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன, புற்றுநோயால் தங்கள் உடலில் உள்ள பாகங்களில் தோன்றும் மாற்றங்களை எவ்வாறு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி இது புற்றுநோய்க்கான அறிகுறியா அல்லது சாதாரண வியாதிக்குரிய அறிகுறியா என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பெண்களை வெகுவாக தாக்குவது ஒன்று மார்பக புற்றுநோய். மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டால் மார்பகத்தை இழக்காமல் ஆரம்ப நிலையிலே மார்பகப் புற்றுநோயை அழித்து விடலாம். ஆனால் கவன குறைவால் கண்டும் காணாமல் இருந்தால் பின்னால் தங்கள் மார்பகங்களையே இழக்க நேரிடும் என்பதை ஆணித்தனமாக சுட்டி காட்டினார். மற்றொன்று பெண்களை வெகுவாக தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீரில் ரத்தம் போக்கு நாள்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் அதிக உதிரப்போக்கு போன்ற அறிகுறிகள் தங்கள் உடலில் தென்பட்டால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்று பரிசோதனை செய்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணம் புற்றுநோயா அல்லது சாதாரண நோய் தான் என்பதை உடனே தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு பரிசோதித்து கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் முற்றிலும் தடுக்கலாம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் எளிமையாக அருமையாக தங்கள் சிறப்புரையில் எடுத்துக் கூறினார். மருத்துவரின் உரைக்குப்பின் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட  மாணவிகள்  தங்களின் கூந்தலில் இருந்து 15 இன்ச் தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு உள்ள நோயாளிகளுக்கு விக் செய்வதற்காக தங்களது முடியை தானம் செய்தனர் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டக்கல்லூரி மாணவிகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு உரை