நமது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது மருத்துவமனையில் காலை முதல் மாலை வரை அனைத்து பரிசோதனைகளும் ஸ்கேன்களும் இலவசமாக செய்வதோடு நாகமங்கலத்தில் மேற்கு நாகமங்கலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் 100 பெண்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் ஸ்கிரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது .இதில் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதற்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பாப் ஸிமியர், தெர்மோகிராம் போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் இதில் மருத்துவர் யாமினி மருத்துவர் ரேகா செவிலியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் அவர்கள் கலந்துகொண்டு இந்த முகாமினை நடத்தினார்கள் இதில் பஞ்சாயத்து நாகமங்கலம் பஞ்சாயத்தின் தலைவர் திரு வெள்ளைச்சாமி அவர்கள் தலைமை தாங்கி இந்த முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு 03.02.23 ஆகிய இன்று புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மூன்றாவது நிகழ்வாக ஒரே நாளில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜ் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மற்றும் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை துறையில் தங்கப்பதக்கம் வென்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மூன்று கல்லூரிகளில் இன்று ஒரே நாளில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றியது உண்மையில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு உரையானது எதிர்வரும் 4- தேதி புற்றுநோய் தினமாகிய அந்த நாளில் ஏற்கப்படும் சூளுரையாக அமையும் என்பது மிகையாகாது. இந்த நாளில் மாலை 3:30 மணி அளவில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் புற்றுநோய்க்கான பேருரை நிகழ்த்தினார். இதில் மூன்று இராணுவ அதிகாரிகள் தலைமையில் 120 என்சிசி ஆர்மி மற்றும் ஸ்கவுட் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர் இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான சொற்பொழிவானது மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் என்றால் என்ன என்பதை மருத்துவரின் விளக்கத்தோடு நன்கு புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் பலவிதமான வினாக்களை எழுப்பி எவ்வாறு புற்றுநோயை புரிந்து கொண்டோமோ அது போல் இந்த உலகத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சபதம் ஏற்று தங்களுக்குள்ளே whatsapp குரூப் அமைத்து அதில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளையும் புற்றுநோய் எதனால் உருவாகிறது எந்தெந்த பொருட்களை உட்கொள்வதால் வருகிறது என்பதையும் புற்றுநோய் வராமல் எவ்வாறு நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தமது குரூப்புகளில் பதிவிட்டு ஒருவர் கூட இனி புற்றுநோயால் பாதிக்க கூடாது ஆரம்ப நிலையில் கண்டுகொண்டு உலக மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வை வழங்குவோம் என்று சபதம் ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் மருத்துவர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விழா நன்றியுரைடன் இனிதே முடிவடைந்தது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 03/02/2023 அன்று நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் அமைந்துள்ள சீனிவாசன் பல் ,பொது மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புற்றுநோயும் பல் மருத்துவமும் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்கும் மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பல் மருத்துவத்துறையில் எவ்வாறு புற்றுநோய் ஒரு பெரிய அங்கம் வகிக்கிறது, அது எவ்வாறு பல் பகுதியில், தாடை பகுதியில் , கழுத்துப் பகுதியில் மற்றும் உணவு குழாய் பகுதியில் புற்று நோய்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை விளக்கினார்.இதில் பல்வேறு பல் மருத்துவத்துறையினர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கௌரவித்தார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 02/02/ 2023 அன்று மாலை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாட்டு துறையில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சிறப்புரை ஆற்றினார். இந்த விழா பாரதிதாசன் யூனிவர்சிட்டியின் மாசு கட்டுப்பாட்டு துறையின் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் புற்றுநோய்க்கான சிறப்பு குழுக்கள் அமைத்து மாணவர்களாகிய நீங்கள் புற்றுநோய் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க எவ்வாறு பாடுபட வேண்டும், அதனால் பொதுமக்கள் எவ்வாறு பயன்பட வேண்டும், புற்றுநோய் என்ற கொடிய நோயை எவ்வாறு நாம் இவ் உலகை விட்டு ஒழிக்க வேண்டும் என்பதை பற்றி சிறப்புரையாற்றினார். இச்செய்திகளை மாணவர்களுக்கு குறும்படம் வாயிலாகவும், புகைப்பழக்கதால் ஒரு குடும்பம் அல்லல்படும் நிலைமையை ஒரு சிறுமி தன் தந்தையை இழந்து படும் வேதனையை கூறும் படமாக வடிவமைத்து அதை மாணவர்களிடையே ஒளிபரப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்., மாணவர்கள் புற்றுநோய் என்னும் கொடிய நோயிலிருந்தும் போதை வஸ்துக்கள் மற்றும் போதை மாத்திரைகள், மது பழக்கங்கள் இவைகள் இருப்பவர்களும், இல்லாதவர்களும் இனி இந்த கொடிய நோய் பரவாமல் தடுப்பதற்கு நாங்கள் இன்றிலிருந்து முயற்சி மேற்கொள்கிறோம் என்று கூறினர். விழாவில் டாக்டர் திரு கோவிந்தராஜ் அவர்கள் துறை த்தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டு நன்றி உரையுடன் இனிதே முடிவடைந்தது.