02/02/ 2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி மணிகண்டம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள இந்திரா கணேசன் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் கல்லூரியைச் சேர்ந்த 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் தமது உரையில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளாகிய வேக்சின், பெண்களுக்கான சுய மார்பக பரிசோதனை மற்றும் செர்விக்கல் கேன்சர்க்கான அறிகுறிகள் போன்றவற்றை எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி விளக்கி கூறினார். பெண்களை வெகுவாக பாதிக்கும் மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய புகைப்படம் விளக்கங்களோடு எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்களும் தாங்கள் இந்த நாளில் சபதம் மேற்கொள்வோம் என்று புற்றுநோய் உருவாக்கும் எந்த விதமான பொருட்களையும் நமது உறவினர்களோ, நண்பர்களோ, நெருங்கிய உறவுகளோ யாரும் உபயோகிக்காமல் தடுப்போம். என உறுதிமொழியேற்றனர். விழாவில் கல்லூரி முதல்வர் அவர்களால் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கௌரவிக்கப்பட்டு நன்றி உரையுடன் விழா இனிதே முடிவடைந்தது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் 01/02 / 2023 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 900 மாணவ மாணவிகள், ஊழியர்கள், கல்லூரியின் முதல்வர், தாளாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் தமது உரையில் புற்றுநோய் என்றால் என்ன, அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, பிறருக்கும் புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது, அதற்கான வழிமுறைகளை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவில் உரையாற்றினார். அதோடு பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளும் புற்று நோய்க்கான தடுப்பு முறையில் நாங்கள் தொண்டாற்றுவோம் எவ்வாறு எனில், எங்கள் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான விதிமுறைகளை முதலில் கூறுவோம். பின்பு எங்களது கைபேசியில் ஒரு whatsapp குரூப் அமைத்து அந்த குரூப்பில் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி,ஆரம்பத்திலே எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறிய அனைத்து செய்திகளையும் அதில் பதிவிட்டு அதை பார்க்கும் ஒவ்வொருவரும் புகை பிடிக்காமலும், குட்கா,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள், மதுப்பழக்கம் இருந்தால் அதை தடுக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்வோம் என்று சபதம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார் . இந்த விழாவில் அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Inaugural function of Sprrout Fetal medicine centre

Inaugural function of Sprrout Fetal medicine centre

Pongal celebration

As we celebrated this beautiful festival of harvest we bow down deep in gratitude to all farmers for bringing health to…

Rare cancer of multiple myeloma

This middle aged man was brought to our hospital with a rare cancer of multiple myeloma affecting the eye. His right eye

Our successful story

A 60 year old man came to our Hospital with huge swelling in the neck, when we evaluated further we found he had a huge Thyroid