உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 02/02/ 2023 அன்று மாலை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாட்டு துறையில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சிறப்புரை ஆற்றினார். இந்த விழா பாரதிதாசன் யூனிவர்சிட்டியின் மாசு கட்டுப்பாட்டு துறையின் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் புற்றுநோய்க்கான சிறப்பு குழுக்கள் அமைத்து மாணவர்களாகிய நீங்கள் புற்றுநோய் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க எவ்வாறு பாடுபட வேண்டும், அதனால் பொதுமக்கள் எவ்வாறு பயன்பட வேண்டும், புற்றுநோய் என்ற கொடிய நோயை எவ்வாறு நாம் இவ் உலகை விட்டு ஒழிக்க வேண்டும் என்பதை பற்றி சிறப்புரையாற்றினார். இச்செய்திகளை மாணவர்களுக்கு குறும்படம் வாயிலாகவும், புகைப்பழக்கதால் ஒரு குடும்பம் அல்லல்படும் நிலைமையை ஒரு சிறுமி தன் தந்தையை இழந்து படும் வேதனையை கூறும் படமாக வடிவமைத்து அதை மாணவர்களிடையே ஒளிபரப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்., மாணவர்கள் புற்றுநோய் என்னும் கொடிய நோயிலிருந்தும் போதை வஸ்துக்கள் மற்றும் போதை மாத்திரைகள், மது பழக்கங்கள் இவைகள் இருப்பவர்களும், இல்லாதவர்களும் இனி இந்த கொடிய நோய் பரவாமல் தடுப்பதற்கு நாங்கள் இன்றிலிருந்து முயற்சி மேற்கொள்கிறோம் என்று கூறினர். விழாவில் டாக்டர் திரு கோவிந்தராஜ் அவர்கள் துறை த்தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டு நன்றி உரையுடன் இனிதே முடிவடைந்தது.