உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளிடையே புற்றுநோய் பற்றிய தொடர் விழிப்புணர்வு உரைகளை நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜன் அவர்களும் மருத்துவர் திருமதி சசிப்பிரியா கோவிந்தராஜன் அவர்களும் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் தொடர் நிகழ்வாக இன்று 09.02.2023 புதன்கிழமை ஜமால் முகமது கல்லூரியில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்ரியா கோவிந்தராஜன் அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும் நமது மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகரன் அவர்கள் மாணவிகளுக்கு வளர் இளம் பருவ உடல்நலன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி வைஷ்ணவி தேவி அவர்கள் பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கல்லூரியில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி புற்றுநோய் இல்லாத பாரதம் படைக்க உறுதி ஏற்றனர். நிகழ்வின் இறுதியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி முதல்வர் ஹாஜி S.இஸ்மாயில் முஹைதீன் அவர்கள் நமது நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்பிரியா அவர்களுக்கும் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகர் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வை கல்லூரியின் பேராசிரியர் திரு சையது அவர்களும் திருமதி ஆயிஷா அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

IMG 20230209 WA0050IMG 20230210 WA0021