உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு 03.02.23 ஆகிய இன்று புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மூன்றாவது நிகழ்வாக ஒரே நாளில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜ் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மற்றும் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை துறையில் தங்கப்பதக்கம் வென்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மூன்று கல்லூரிகளில் இன்று ஒரே நாளில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றியது உண்மையில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு உரையானது எதிர்வரும் 4- தேதி புற்றுநோய் தினமாகிய அந்த நாளில் ஏற்கப்படும் சூளுரையாக அமையும் என்பது மிகையாகாது. இந்த நாளில் மாலை 3:30 மணி அளவில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் புற்றுநோய்க்கான பேருரை நிகழ்த்தினார். இதில் மூன்று இராணுவ அதிகாரிகள் தலைமையில் 120 என்சிசி ஆர்மி மற்றும் ஸ்கவுட் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர் இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான சொற்பொழிவானது மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் என்றால் என்ன என்பதை மருத்துவரின் விளக்கத்தோடு நன்கு புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் பலவிதமான வினாக்களை எழுப்பி எவ்வாறு புற்றுநோயை புரிந்து கொண்டோமோ அது போல் இந்த உலகத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சபதம் ஏற்று தங்களுக்குள்ளே whatsapp குரூப் அமைத்து அதில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளையும் புற்றுநோய் எதனால் உருவாகிறது எந்தெந்த பொருட்களை உட்கொள்வதால் வருகிறது என்பதையும் புற்றுநோய் வராமல் எவ்வாறு நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தமது குரூப்புகளில் பதிவிட்டு ஒருவர் கூட இனி புற்றுநோயால் பாதிக்க கூடாது ஆரம்ப நிலையில் கண்டுகொண்டு உலக மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வை வழங்குவோம் என்று சபதம் ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் மருத்துவர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விழா நன்றியுரைடன் இனிதே முடிவடைந்தது.

IMG 20230204 WA0056 IMG 20230203 WA0017 IMG 20230203 WA0015