மே 23 2024 அன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புத்த பூர்ணிமா திருநாள் கொண்டாடப்பட்டது. புத்த பூர்ணிமா திருநாளானது இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு புத்த பூர்ணிமா நாளானது புத்தரின் 2585 ஆவது பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது .புத்தரின் பிறந்த தினம், ஞானமடைந்த தினம், மற்றும் இறந்த தினம் ஆகிய மூன்றும் சேர்ந்த பௌர்ணமி தினம் புத்த பூர்ணிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்பு ,அறிவு, கருணை, நல்லொழுக்கம், நேர்மை ஆகிய கொள்கைகளை புத்தர் போதித்தார். இந்த கொள்கையின் அடிப்படையில் செயல்படும் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 13 வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. சேவையின் ஒரு பகுதியாக மே 23 வியாழக்கிழமை அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச பொது மருத்துவ முகாமில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் G.கோவிந்தராஜ்., புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் .P. சசிப்ரியா கோவிந்தராஜ் கதிரியக்க சிகிச்சை நிபுணர்.,அவர்களின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை செய்தனர் . இந்த இலவச பொது மருத்துவ முகாமில் 100-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் முகாமோடு சேர்த்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. மாபெரும் அன்னதான நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பாங அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை திரு கமலம் கருப்பையா., ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிகண்டம், திரு வெள்ளைச்சாமி, பஞ்சாயத்து தலைவர் நாகமங்கலம், திருமதி எமல்டா லில்லி கிரேசி ஊராட்சி மன்ற தலைவர், அளுந்தூர். திரு .S.சந்தியாகு மாவட்ட பிரதிநிதி திரு.N.K.S. அற்புதராஜ் முன்னாள் தலைவர் நாகமங்கலம், திரு.M.D. இருதயராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர், திரு M.தங்கவேல் மதிமுக, திரு .ரமேஷ், பிரின்ஸ் ஹோட்டல், இவர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் விழாவிற்கு கௌரவ விருந்தினர்களாக திரு. போதி அம்பேத்கார் பொதுச்செயலாளர், தமிழ்நாடு பௌத்த சங்க பேரவை. அருள்பணி முனைவர்.கா. சார்லஸ் இயக்குனர் புனித ஜான்பால் உரையாடல் மன்றம், திருச்சி கத்தோலிக்க மறை மாவட்டம், மெளலா இமாம் .முகமது இஸ்மாயில் ஆலம்பட்டி மற்றும் திருமதி வெளிச்சம் ஷெரின்., சமூக ஆர்வலர் ,சென்னை. ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவாக ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் G.கோவிந்தராஜ்., புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.P. சசிப்ரியா கோவிந்தராஜ் கதிரியக்க சிகிச்சை நிபுணர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Buddha Purnima Thirunal was celebrated on 23rd May 2024 at Harshamitra Hospital, Trichy. Buddha Purnima festival is celebrated not only in India but also in many countries including Nepal, Sri Lanka and Thailand. This year the Buddha Purnima day is celebrated as the 2585th birthday of Buddha. The full moon day of Buddha’s birth, enlightenment, and death day is observed as Buddha Purnima day.
Buddha taught the principles of love, wisdom, compassion, virtue and honesty. Working on this principle, our Harshamitra Hospital has been providing medical services to the public for the past 13 years. As part of the service, a grand medical camp and charity program was held at Harshamitra Hospital on Thursday, May 23. In this free general medical camp, Harshamitra Hospital Managing Directors Dr. G. Govindaraj., Cancer Surgeon Dr. P. Sasipriya Govindaraj, Radiotherapist, under their leadership, specialist doctors participated and conducted free consultations and examinations for the public. More than 100 people participated and benefited in this free public medical camp. A grand almsgiving program was also held along with the camp. More than 500 people were given special alms in the grand almsgiving program. The event was graced by Mr. Kamalam Karupiya, Panchayat Union President Manikandam. Mr. Vellichamy, Panchayat President, Nagamangalam, Ms Emelda Lilly Gracey is the Parish Council President, Alundur, Mr.S.Sandyagu district representative Mr.N.K.S. Nagamangalam, ex-president of Aumashraj,Mr. M.D. M.Thangavel M.D.U.K, Mr. Ramesh, Prince Hotel. And the guests of honor for the ceremony were Mr. Bodhi Ambedkar General Secretary, Tamil Nadu Buddhist Association Council, Dr. Arulpani .K. Charles Director St. John Paul Dialogue Forum, Trichy Catholic Diocese, Melala Imam .Mohammed Ismail Aalampati and Mrs. VELICHAM Sherin, Social Activist, ChennaI graced the occasion. At the end of the program Harshamitra Hospital Managing Directors Dr. G.Govindaraj., Surgical Oncologist and Dr.P. Sasipriya Govindaraj, Radiation Oncologist thanked everyone who came for gracing the occasion.