நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், 11/02/2023 அன்று, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்.ரா.ஹரீஷ்குமார் அவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு செய்ய வேண்டிய அவசர சிகிச்சை மற்றும் அவர்களை கையாளும் விதம் பற்றிய சிறப்பு பயிற்சியினை அளித்தார். சுமார் 20 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ரோஸ்கார்டன் பாரமெடிக்கல் பயிற்சி கல்வி நிறுவனம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

IMG 20230211 WA0024 IMG 20230211 WA0023