உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை இணைந்து ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் பேராசிரியர் திருமதி பாரதி அவர்கள் மற்றும் 100-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.