உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு (04.02.2024) ரோஸ் கார்டன் அறக்கட்டளை மற்றும் பிங்க் கிராஸ் சொசைட்டியுடன் இணைந்து ஹர்ஷமித்ரா பல்நோக்கு மருத்துவமனை நடத்திய “CLOSE THE CARE GAP” விழிப்புணர்வு முகாம்
பிப்ரவரி 4 அன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா உயர்தர புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அணைத்து பெண்களுக்கும் இலவச மார்பக ஸ்கேனிங் பரிசோதனை முகாம் பொதுமக்களுக்கு கைப்பிரதியின் மூலம் முன்னதாக அறிவிக்கப்பட்டு, ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த முகாமில் இந்த முகாமில் குன்னுர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் Mrs.உஷா அவரகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுசெல்லும் பணியில் இளைஞர்களையும் இணைக்கும் நோக்கத்தில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையால் உருவாக்கப்பட் பிங்க் கிராஸ் சொசைட்டியில் உறுப்பினராக இருக்கும் அநேக இளைஞர்களும் தங்களை இணைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட ஒவ்வொரு இளைஞர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் சிறப்பு விருந்தினர் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த இலவச மார்பக ஸ்கேனிங் பரிசோதனை முகாமில் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெண் மருத்துவர்களால் இலவசமாக மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தெர்மோகிராம் எனப்படும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை வெகு துல்லியமாக முன்னதாக கண்டறியும் ஸ்கேனிங் பரிசோதனையும் செய்யப்பட்டது.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற அநேக இலவச முகாம்களின் நடத்தி, பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வையும் சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு புற்றுநோய் அற்ற சமூகத்தை உருவாக்கி கொண்டுவருகிறது. தற்போது ஹர்ஷமித்ரா மருத்துவமனை கிராமப்புற மக்களும் எளிதாக அணைத்து நவீன சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.