கடந்த 13 வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சையில் மகத்தான சேவை செய்து வரும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒவ்வொரு வருடமும் புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு போராட்டத்தில் முற்றிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த வருடமும் பொதுமக்களிடையே புகையிலை பற்றிய விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் விதமாக “ரீல்ஸ் போடுங்க! ரியல் ஹீரோ ஆகுங்க” என்ற புதுமையான விழிப்புணர்வு வீடியோ ரீல்ஸ் போட்டியை நடத்தியது .
இதில் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாக புகையிலை பிடிக்க மாட்டேன் என்றும் புகையிலை பற்றிய தீமைகள் பற்றியும் குறுகிய வீடியோ போடுபவருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர் .இந் நிகழ்ச்சியில் ரேடியோ பார்ட்னர் ஆக ஹலோ எப் எம் இணைந்து பணியாற்றியது .
இந்த புகையிலைப் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ரீல்ஸ் போட்டியில் குழந்தைகள் ,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ,இளைஞர்கள் ஆண்கள் ,பெண்கள், பெரியவர்கள் ,மற்றும் திருநங்கைகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புகையிலைக்கு எதிரான வீடியோக்கள் உருவாக்கி அனுப்பி வைத்திருந்தனர். இதிலிருந்து மிகச் சிறப்பான ஐம்பது வீடியோக்களை திரைப்பட இயக்குனர் திரு .G வசந்தபாலன் அவர்களின் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்தது.
வெற்றி பெற்றவர்களுக்கான மாபெரும் விருது வழங்கும் விழா மே 31 வெள்ளிக்கிழமை திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் திரு.G .வசந்தபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞர் நந்தலாலா., தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ., திரு ஆர் சி உதயகுமார் சேர்மன் மதர் தெரசா கல்லூரி நிறுவனங்கள் மற்றும் Dr.R. ரமேஷ் பாபு .,மாவட்ட நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத்துறை .திருச்சிராப்பள்ளி .
.அவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களை ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் G . கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள் வரவேற்றார் . தேர்வு செய்யப்பட்ட சிறப்பான வீடியோ ரீல்ஸ் உருவாக்கம் செய்தவர்களுக்கு டைரக்டர். வசந்தபாலன் அவர்கள் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.P.சசிப்பிரியா கோவிந்தராஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவு,மருத்துவமனை மேலாண்மை பணியாளர்கள் மற்றும் துளிர் வீடியோஸ் ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் ,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ‘ரீல்ஸ் போடுங்க! ரியல் ஹீரோ ஆகுங்க! “என்ற புகையிலை விழிப்புணர்வு பற்றிய வீடியோ உருவாக்கும் போட்டி திருச்சி மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்தும் அதிக விழிப்புணர்வு ரீல்ஸ்கள் அனுப்பி இருந்தனர்.
For the past 13 years, Harshamitra Cancer and Multi-Speciality Hospital in Trichy has been providing remarkable services in cancer treatment and has been actively engaging in cancer awareness campaigns every year. As part of this effort, this year the hospital conducted an innovative awareness video reels competition titled “Reels Podunga! Real Hero Agunga” (Post Reels! Become a Real Hero) to raise awareness about tobacco among the public.
On behalf of Harshamitra Hospital, various film celebrities participated and encouraged the public by announcing that those who post short videos about the harms of tobacco and pledge not to smoke would receive prizes. Hello FM collaborated as the radio partner for this event.
More than 200 participants, including children, college students, teachers, young men and women, senior citizens, and transgender individuals, created and submitted videos opposing tobacco. From these, a selection committee led by film director Mr. G. Vasanthabalan chose the best 50 videos.
A grand award ceremony for the winners was held on Friday, May 31, at Harshamitra Hospital in Trichy, with film director Mr. G. Vasanthabalan as the chief guest. The event was presided over by special guests such as Poet .Nandalala, Vice President of the Tamil Nadu Progressive Writers and Artists Association, Mr. R.C. Udhayakumar, Chairman of Mother Teresa Institutions, and Dr. R. Ramesh Babu, District Designated Officer of the Food Safety Department, Tiruchirappalli. Dr. G. Govindaraj Vardhanan, Managing Director of Harshamitra Hospital, welcomed the special guests. Director Vasanthabalan presented awards to the creators of the selected outstanding video reels. Dr. P. Sasipriya Govindaraj, Managing Director of the hospital, delivered the vote of thanks at the end of the event.
The event was organized by the Digital Marketing Department, hospital management staff, and Thulir Videos at Harshamitra Hospital. Over 500 people , including the general public, college students, and youth, attended the event. Notably, the “Reels Podunga! Real Hero Agunga!” tobacco awareness video competition received significant attention and participation not only from Trichy but also from various districts and even international participants.