A friend of mine has a simple but beautiful hobby — she knits.
Recently, she made soft beanies out of pure cotton and donated them to my cancer patients who had lost their hair due to chemotherapy. At first glance, it may seem like a small gesture. But for someone going through cancer treatment, it means the world.
Pure cotton beanies are surprisingly hard to find in the market. Most available ones are woollen or mixed with acrylic, which often cause itching and discomfort — especially for patients whose skin has become sensitive after treatment. These handmade cotton caps, however, are gentle, breathable, and incredibly comfortable.
What touched me most was seeing my young patients wear them with joy. They don’t just feel comfortable — they feel cared for. They feel seen. The beanies are not only soft; they are beautiful. And when a child battling cancer smiles because of something so thoughtfully made, it reminds us what true compassion looks like.
There are many ways to show love in this world. You don’t have to be a doctor, nurse, or healthcare worker to care for cancer patients. Sometimes, caring can be as simple as knitting a cap — stitch by stitch, with kindness woven into every thread.
அன்பைக் காட்ட பல வழிகள் உள்ளன
என் நண்பருக்கு பின்னுதல் ஒரு பொழுதுபோக்கு. சமீபத்தில், அந்த திறமையை ஒரு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தினார். கீமோதெரபி சிகிச்சையால் தலைமுடியை இழந்துள்ள என்னுடைய புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக, தூய பருத்தி நூலால் தொப்பிகளை பின்னி இலவசமாக வழங்கினார்.
சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளின் தலையில் உள்ள தோலானது, மிகவும் மென்மையாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் பல தொப்பிகள் கம்பளி அல்லது அக்ரிலிக் கலவையால் செய்யப்பட்டவை. அவை சிலருக்கு அரிப்பையும் சிரமத்தையும் ஏற்படுத்தும். தூய பருத்தி தொப்பிகள் எளிதாக கிடைப்பதில்லை.
கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் குழந்தைகள் இதை விரும்பி அணிந்தனர்.
இந்த அனுபவம் ஒரு எளிய உண்மையை நினைவூட்டியது — புற்றுநோய் நோயாளிகளை கவனிக்க மருத்துவராகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வழியில் அன்பைக் காட்டலாம்.
சில நேரங்களில், ஒரு சிறிய செயலும் பெரிய ஆறுதலாக மாறும்.






