பிங்க் அக்டோபர்: திருச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு | ஹர்ஷமித்ரா மருத்துவமனை

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருச்சி ஹர்ஷமித்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனையும் ஜமால் முகமது கல்லூரியும் இணைந்து, 16 அக்டோபர் 2026 அன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
டாக்டர் ஜி. கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஜமால் முகமது கல்லூரி மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) தன்னார்வலர்களும் இணைந்து, திருச்சியின் முக்கியப் பகுதிகளான டிவிஎஸ் டோல்கேட், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு வீதி நாடகங்களை நடத்தினர்.

இதன் மூலம் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் (Campaign) ₹999 சிறப்புப் பரிசோதனைத் திட்டம் குறித்த நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
₹999 சிறப்புப் பரிசோதனைத் திட்டம் – அக்டோபர் மாதம் முழுவதும்!
பிங்க் அக்டோபரை முன்னிட்டு, ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ₹999-க்கு மூன்று மார்பகப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேமோகிராம் (Mammogram)
தெர்மோகிராம் (Thermogram)
சோனோகிராம் (Sonogram)