கலையின் மூலம் சமய நல்லிணக்கம்” – கலைக்காவேரி கல்லூரி நிகழ்வில் டாக்டர் கோவிந்தராஜ் வர்தணன் சிறப்புரை

திருச்சி – 11 செப்டம்பர் 2026

திருச்சி கலைக்காவேரி
நுண்கலைக் கல்லூரியில்
“கலையின் மூலம் சமய
நல்லிணக்கம்” என்ற
கருப்பொருளில்
கல்லூரிகளுக்கு இடையேயான
கலைப் போட்டிகள் மற்றும்
பரிசளிப்பு விழா
நடைபெற்றது. செவ்வியல்
நடனம், குரலிசை, கருவியிசை,
ரங்கோலி, வண்ண ஓவியம்,
நாட்டுப்புறப் பாடல்
உள்ளிட்ட பல்வேறு
போட்டிகளில் 300-க்கும்
மேற்பட்ட மாணவர்கள்
பங்கேற்று தங்களது
திறமைகளை
வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் ஹர்ஷமித்ரா
புற்றுநோய்
மருத்துவமனையின் நிர்வாக
இயக்குநரும், புற்றுநோய்
அறுவை சிகிச்சை நிபுணருமான
டாக்டர் ஜி.
கோவிந்தராஜ்வர்தனன்
சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.

தமது உரையில், பல்வேறு
மதங்கள், சமூகங்கள் மற்றும்
பண்பாடுகளுக்கு இடையிலான
வேறுபாடுகளைத் தாண்டி
மக்களை ஒன்றிணைக்கும்
சக்தியாக கலை விளங்குகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
பரஸ்பர மரியாதை, புரிதல்,
சமத்துவம் மற்றும்
நல்லிணக்கத்தை
வளர்ப்பதில் கலைக்கும்
கலைஞர்களுக்கும் முக்கிய
பங்கு இருப்பதாகவும், இளம்
கலைஞர்கள் தங்களது
படைப்பாற்றலை அமைதி,
மனிதநேயம் மற்றும் சமூக
நல்லிணக்கம் போன்ற உயரிய
மதிப்புகளை
வளர்ப்பதற்குப்
பயன்படுத்த வேண்டும்
என்றும் அவர்
வலியுறுத்தினார்.

நிகழ்வின் நிறைவில்,
பல்வேறு கலைப் போட்டிகளில்
சிறப்பிடம் பெற்ற
மாணவர்களுக்கு சுழல்
கோப்பை, கேடயம்,
பரிசுத்தொகை மற்றும்
சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த
சாம்பியன்ஷிப் பட்டத்தை
ஜோசப் கல்லூரி முதல்
இடமும், சீதாலட்சுமி
ராமசாமி கல்லூரி இரண்டாம்
இடமும் பெற்றன.

ஹர்ஷமித்ரா புற்றுநோய்
மருத்துவமனை, கலை, கல்வி
மற்றும் சமூக
நல்லிணக்கத்தை
மேம்படுத்தும் இதுபோன்ற
முயற்சிகளுக்கு தொடர்ந்து
ஆதரவளிக்கும் என்பதை
இந்நிகழ்வு
எடுத்துக்காட்டியது.