திருச்சி, 26 ஜூன் 2025: சர்வதேச போதைப்பொருள் மற்றும் அனுமதியற்ற போக்குவரத்து எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி நேரு நர்சிங் கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் செயல் இயக்குநரும், மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி. சசிப்ரியா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
“புகையிலை, மது, மற்றும் போதைப்பொருட்கள் இன்று இளைஞர்களின் வாழ்க்கையில் சூட்சமமாக நுழைந்து, அவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது,” எனக் கூறிய அவர், “முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வும், துணிவும் இருந்தால்தான் நாம் வாழ்க்கையை பாதுகாக்க முடியும்,” என்றார்.
இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல கேள்விகளும் எழுப்பினர். நர்சிங், மெடிக்கல், மாணவர்களுக்கேற்ற வண்ணம், உரையிலும், விளக்கப்படங்களிலும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் “போதை இல்லாத வாழ்கையை தேர்ந்தெடுப்போம்” என உறுதிமொழி எடுத்தனர். இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாணவர் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்றது.

Dr. P. Sasipriya’s Drug Awareness Talk at Nehru Engineering College, Trichy
Trichy, June 26, 2025: As part of the International Day Against Drug Abuse and Illicit Trafficking, a special awareness session was conducted at Nehru College of Engineering, Trichy, by Harshamitra Cancer & Multispecialty Hospital.
The keynote speaker was Dr. P. Sasipriya, Executive Director and Senior Radiation Oncologist at Harshamitra. Addressing a group of attentive students, she shed light on the dangers of tobacco, alcohol, and drug addiction, especially among youth.
“Addiction doesn’t always knock loudly—it slowly eats into health, mind, and future,” she said. “Awareness and courage to say no at the right time can protect a lifetime.”
The session included easy-to-understand explanations, visual slides, and real-life medical cases. The students interacted enthusiastically and asked meaningful questions about prevention and peer pressure.
At the end, the students took a pledge to stay away from all forms of substance abuse and become ambassadors of a healthy lifestyle.
Such sessions are a part of Harshamitra’s continued mission to spread medical knowledge and prevent cancer and addiction before they begin.
