Harshamitra Cancer & Multispeciality Hospital, in association with Rose Garden Charitable Trust, celebrated National Doctors’ Day on July 1, 2026, at the hospital’s Conference Hall in Trichy to honour the dedication and invaluable contributions of its medical professionals.
The celebration brought together consultants, radiation oncologists, emergency medical officers (EMOs), duty medical officers (DMOs), dietitians, and members of the multidisciplinary healthcare team. A special appreciation video featuring heartfelt messages from hospital staff and patients expressed gratitude for the doctors’ compassion, commitment, and exceptional patient care. Another presentation highlighted the doctors’ professional journey and their contributions to the hospital.
As a token of appreciation, all participating doctors were felicitated with commemorative gifts in recognition of their unwavering service. The event concluded with a cake-cutting ceremony and a group photograph, reflecting the hospital’s commitment to recognising the tireless efforts of its doctors and its mission to deliver compassionate, patient-centred healthcare to the community.
ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெசிஷாலிட்டி மருத்துவமனை, ரோஸ் கார்டன் அறக்கட்டளையுடன் இணைந்து, ஜூலை 1, 2026 அன்று திருச்சியில் உள்ள மருத்துவமனை மாநாட்டு அரங்கில் தேசிய மருத்துவர்கள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சிறப்பான மருத்துவச் சேவையைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலோசனை மருத்துவர்கள், கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள் (Radiation Oncologists) மற்றும் பல்துறை மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர். மருத்துவர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பகிர்ந்த நன்றியுரைகள் அடங்கிய சிறப்பு காணொளி திரையிடப்பட்டது. மேலும், மருத்துவர்களின் பணிப்பயணம் மற்றும் மருத்துவமனைக்கான அவர்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் காணொளியும் இடம்பெற்றது.
மருத்துவர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி கேக் வெட்டும் விழாவும், குழு புகைப்படமும் உடன் இனிதே நிறைவடைந்தது. மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் என்றும் மதிக்கும் தனது உறுதியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இந்நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது.






