Media

placeholder

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளிடையே புற்றுநோய் பற்றிய தொடர் விழிப்புணர்வு உரைகளை நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜன் அவர்களும் மருத்துவர் திருமதி சசிப்பிரியா கோவிந்தராஜன் அவர்களும் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் தொடர் நிகழ்வாக இன்று 09.02.2023 புதன்கிழமை ஜமால் முகமது கல்லூரியில் நமது மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்ரியா கோவிந்தராஜன் அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும் நமது மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகரன் அவர்கள் மாணவிகளுக்கு வளர் இளம் பருவ உடல்நலன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி வைஷ்ணவி தேவி அவர்கள் பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கல்லூரியில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி புற்றுநோய் இல்லாத பாரதம் படைக்க உறுதி ஏற்றனர். நிகழ்வின் இறுதியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி முதல்வர் ஹாஜி S.இஸ்மாயில் முஹைதீன் அவர்கள் நமது நிர்வாக இயக்குனர் திருமதி சசிப்பிரியா அவர்களுக்கும் மகப்பேறு மற்றும் கருநல மருத்துவர் திருமதி ரேவதி சந்திரசேகர் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வை கல்லூரியின் பேராசிரியர் திரு சையது அவர்களும் திருமதி ஆயிஷா அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

placeholder

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மேற்கொண்டு வரும் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி புற்றுநோயை கண்டுகொள்ளும் விதத்தில் மாணவ மாணவிகளின் பங்கு என்ன ??? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் ஜி கோவிந்தராஜ் வர்தனன் சார் அவர்கள் மற்றும் மருத்துவர் திருமதி சசிப்பிரியா கோவிந்தராஜ் அவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்கள் .பல நிறுவனங்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்த புற்றுநோயை ஒழிக்க முதல் படி மாணவர்களே !!! இளைய சமுதாயமாகிய மாணவர்கள் இந்த நிலையில் புற்றுநோயை பற்றி தெரிந்துக்கொண்டால் அதை எதிர்காலத்தில் ஒழிக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக தேர்ந்தெடுத்து கல்லூரிகள் தோறும் புற்றுநோய் பற்றிய கருத்தரங்கு நிகழ்த்தி வருகிறார்கள் .இந்த நிகழ்வின் ஒன்பதாவது நாளாகிய இன்று(9/2/2023) எமது புற்றுநோய் அறுவை சிகிச்சையில் தங்கப் பதக்கம் வென்ற மருத்துவர் கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள் திருச்சி கோணலையில் அமைந்துள்ள திருச்சி இன்ஜினியரிங் கல்லூரியில் 300 மாணவ மாணவிகள் அடங்கிய விழாவில் பேருரை ஆற்றினார்கள் நமது மருத்துவர் அவர்கள் பேருரையின்போது தன் வாழ்க்கையில் தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட அனுபவங்களை பெற்ற கஷ்டங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள் நான் பட்ட கஷ்டம் இனிமேல் எந்த குடும்பமும் படக்கூடாது என்ற நல்ல உயரிய நோக்கத்தில் தன் உரையின் துவக்கத்திலேயே கூறி அனைவரையும் புகையிலை போதை பொருட்கள் மதுபானங்கள் போன்ற பழக்கங்களை இந்த வயதினர் கற்றுக் கொள்வது இயல்பு எனவே அதை தயவு கூர்ந்து தடுக்க வேண்டும், அதோடு இல்லாமல் அந்தப் பழக்கங்களில் இருப்பவர்களை அந்த பழக்கத்தை விட்டு வெளிவர தேவையான அறிவுரைகளை கூற வேண்டும் என்று கூறினார்கள். பிற்காலத்தில் புற்றுநோயை அழிக்க வேண்டும் என்றால் இன்றே நீங்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு என்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க இன்னும் சில புற்று நோய்கள் பெண்களுக்கு வராமல் தடுக்க மேற்கண்ட பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கிரீனிங் டெஸ்ட்களை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள் பொதுவாக ஒன்பது வயது முதல் 22 வயது கொள் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியினை கண்டிப்பாக அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் ஆண்களும் பெண்களும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக அவர்களுக்கு புரியும் படியாக கூறினார்கள் இன்று வரை இந்த தடுப்பூசியை போடவில்லை எனில் உடனே போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி இந்த ஊசியினால் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வயிறு பகுதிகள் ஏற்படும் புற்றுநோய் போன்ற புற்று நோய்களை தடுக்கலாம் எனவும் கூறினார்கள் .ஆண்களுக்கு பரவும் புற்று நோய்கள் ஆகிய ஓரல் கேன்சர் எனப்படும் வாய் பகுதி புற்றுநோய் தொண்டை மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் உணவு குழாயில் ஏற்படும் புற்றுநோய்கள் நுரையீரலில் ஏற்படும் புற்று நோய்கள் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்கள் வெகுவாக புகைப்பதினால் வருகிறது இதை தடுக்க அனைவரும் புகைக்கக் கூடாது ஆண்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறி விழாவில் நிறைவுக்கு கொண்டு வந்தனர் பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் நமது நிர்வாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர் . பின்பு நமது நிர்வாகி அவர்கள் கல்லூரியின் முதல்வர் அவர்களை கௌரவிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவடைந்தது நன்றி

placeholder

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் செயல்பாடுகளில் திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரிகள் கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் புற்றுநோய் பற்றிய கருத்து அரங்குகள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று எட்டாம் நாளாக (8/2/2023)திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் தன்னாட்சி கல்லூரியில் உணவு மற்றும் போஷாக்கு அதாவது நியூட்ரிஷியன் அண்ட் டைட்டீஷியன் துறையில் பயின்று வரும் மாணவிகளுக்கு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் சுமார் 70 மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின் தொடக்கமாக நியூட்ரிஷன் டிபார்ட்மென்ட் தலைவர் அவர்கள் நம் மருத்துவரை வரவேற்று கவுரவிக்க விழாவானது தொடங்கியது .இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் புற்றுநோயை பற்றி ஒன்றுமே தெரியாமல் அமர்ந்திருந்த அவர்கள் புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய் எவ்வாறு வருகிறது அது எந்த விதத்தில் பரவுகிறது எவ்வாறு உயிர் கொள்ளியாக மாறுகிறது என்ற எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த அவர்கள் உரை நிகழ்வில் அனைத்தையும் புரிந்து கொண்டு புற்றுநோய் என்றால் என்ன தெரிந்து கொண்டோம் புற்றுநோய் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் வராமல் தடுப்போம் அதற்கான வழிமுறைகள் என்னவென்று நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம் என்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு உரையின் நிறைவில் நம் மருத்துவரிடம் பலவிதமான சந்தேகங்களையும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டனர் மாணவர் மாணவிகள் புற்றுநோய் பற்றி புரிதலை ஏற்படுத்திய நமது மருத்துவமனை ஏற்படுத்தியுள்ள qr கோடில் பதிவு செய்து அதை ஒரு விழிப்புணர்வு சாதகமாக பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழா நிறைவில் நமது நிர்வாகி அவர்கள் துணைத்தலைவருக்கு பொன்னாடை போர்த்த நன்றி உரையுடன் விழா இனிதே முடிவடைந்தது .

placeholder

இன்று 7.2.2023 நமது திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் உலக புற்றுநோய் தின நிகழ்வாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கல்லூரியில் புற்று நோய்க்கான விழிப்புணர்வு பேருரை நமது ஹர்ஷமித்ராவின் நிர்வாக இயக்குனர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் பங்கு கொண்டு நிறுவனத்தின் தாளாளர் திரு சீனிவாசன் ஐயா அவர்களால் கௌரவிக்கப்பட்டு இந்த நிகழ்வானது தொடங்கியது. இந்த நிகழ்வில் 300 மாணவிகள் பங்கு கொண்டனர் நம் நிறுவனத் தலைவரின் அன்பான சொற்பொழிவை கேட்டு அவர்கள் புற்றுநோய் இல்லா உலகத்தை படைப்போம் என சபதம் ஏற்றுக் கொண்டனர் இன்று அவர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற ஒரு கியூ ஆர் கோடு(QR code) வழங்கப்பட்டது அதில் அவர்கள் கேன்சர்கான நிகழ்வுகளை நம் மருத்துவமனை மூலம் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் அவர்கள் கேன்சருக்கான புதிய பரிணாம நிகழ்வுகள் ஏதும் செய்வது என்றால் இந்த க்யூ ஆர்(QR code) கோடை பயன்படுத்தி செய்வதற்கும் புற்றுநோயை ஒழிப்போம் என்ற சபதத்தை விடாமல் கடைப்பிடிப்பதற்காகவும் இந்த க்யூ ஆர் கோடு எனது இன்றைய தினத்தில் உருவாக்கப்பட்டது இதில் புற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கும் தங்களின் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் காப்பதற்கும் தாங்கள் புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்வதற்கும் அனைத்து மாணவிகளும் சபதம் ஏற்று கொண்டனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

placeholder

6 /2 /2023 இந்த நாளில் நமது திருச்சி நாகமங்கலத்தில் இயங்கி வரும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் அவர்கள் மருத்துவர் G.கோவிந்தராஜ் MBBS.,MS.,MCH.,FICS., அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் திருச்சி திருவானைக் கோவிலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பேருரை ஆற்றினார்கள் இந்த நிகழ்வில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் திருமதி லட்சுமி அவர்கள் தலைமை ஏற்க மற்றும் சோசியல் டிபார்ட்மென்ட் ஹச்ஓடி திருமதி சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்க நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் இந்த சொற்பொழிவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டு புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகளில் எவ்வாறு மாணவ மாணவிகளின் பங்குகள் அமைகின்றன என்பதை நமது எம்டி அவர்கள் தெளிவாக எடுத்துரைக்க அனைத்து மாணவர்களும் இன்றைய நாளில் புகைப்பதிலும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை எடுப்பதிலும் பிறர் பயன்படுத்தும் பொழுதும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் கண்டிப்பாக தடுப்போம் எனவும் அவரவர் பிறந்த நாட்களில் தனது தாய் தந்தைகளுக்கு தேவையான பரிசோதனைகளை பரிசாக வழங்க வேண்டும் என்ற சிறப்புரையும் ஏற்று ஒவ்வொருவரும் இந்த புற்றுநோய் தினத்தில் உறுதிமொழி மேற்கொண்டனர் பின்பு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முதல்வர் அவர்களால் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக நிர்வாக இயக்குனர் அவர்கள் திருமதி சித்ரா மேடம் அவர்களை கௌரவித்தார்கள் பின்பு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது இந்த நிகழ்வில் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டது சங்கரராமன் அவர்கள் சிவ அருணாச்சலம் அவர்கள் முபின் பேகம் அவர்களுக்கு நன்றி.