Media உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ராவின் செயல்பாடுகளில் திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரிகள் கல்லூரிகள் தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு என்ற தலைப்பில் புற்றுநோய் பற்றிய கருத்து அரங்குகள் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று எட்டாம் நாளாக (8/2/2023)திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் தன்னாட்சி கல்லூரியில் உணவு மற்றும் போஷாக்கு அதாவது நியூட்ரிஷியன் அண்ட் டைட்டீஷியன் துறையில் பயின்று வரும் மாணவிகளுக்கு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் சுமார் 70 மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின் தொடக்கமாக நியூட்ரிஷன் டிபார்ட்மென்ட் தலைவர் அவர்கள் நம் மருத்துவரை வரவேற்று கவுரவிக்க விழாவானது தொடங்கியது .இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் புற்றுநோயை பற்றி ஒன்றுமே தெரியாமல் அமர்ந்திருந்த அவர்கள் புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய் எவ்வாறு வருகிறது அது எந்த விதத்தில் பரவுகிறது எவ்வாறு உயிர் கொள்ளியாக மாறுகிறது என்ற எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த அவர்கள் உரை நிகழ்வில் அனைத்தையும் புரிந்து கொண்டு புற்றுநோய் என்றால் என்ன தெரிந்து கொண்டோம் புற்றுநோய் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் வராமல் தடுப்போம் அதற்கான வழிமுறைகள் என்னவென்று நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம் என்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு உரையின் நிறைவில் நம் மருத்துவரிடம் பலவிதமான சந்தேகங்களையும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டனர் மாணவர் மாணவிகள் புற்றுநோய் பற்றி புரிதலை ஏற்படுத்திய நமது மருத்துவமனை ஏற்படுத்தியுள்ள qr கோடில் பதிவு செய்து அதை ஒரு விழிப்புணர்வு சாதகமாக பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழா நிறைவில் நமது நிர்வாகி அவர்கள் துணைத்தலைவருக்கு பொன்னாடை போர்த்த நன்றி உரையுடன் விழா இனிதே முடிவடைந்தது . இன்று 7.2.2023 நமது திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் உலக புற்றுநோய் தின நிகழ்வாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கல்லூரியில் புற்று நோய்க்கான விழிப்புணர்வு பேருரை நமது ஹர்ஷமித்ராவின் நிர்வாக இயக்குனர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் பங்கு கொண்டு நிறுவனத்தின் தாளாளர் திரு சீனிவாசன் ஐயா அவர்களால் கௌரவிக்கப்பட்டு இந்த நிகழ்வானது தொடங்கியது. இந்த நிகழ்வில் 300 மாணவிகள் பங்கு கொண்டனர் நம் நிறுவனத் தலைவரின் அன்பான சொற்பொழிவை கேட்டு அவர்கள் புற்றுநோய் இல்லா உலகத்தை படைப்போம் என சபதம் ஏற்றுக் கொண்டனர் இன்று அவர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற ஒரு கியூ ஆர் கோடு(QR code) வழங்கப்பட்டது அதில் அவர்கள் கேன்சர்கான நிகழ்வுகளை நம் மருத்துவமனை மூலம் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் அவர்கள் கேன்சருக்கான புதிய பரிணாம நிகழ்வுகள் ஏதும் செய்வது என்றால் இந்த க்யூ ஆர்(QR code) கோடை பயன்படுத்தி செய்வதற்கும் புற்றுநோயை ஒழிப்போம் என்ற சபதத்தை விடாமல் கடைப்பிடிப்பதற்காகவும் இந்த க்யூ ஆர் கோடு எனது இன்றைய தினத்தில் உருவாக்கப்பட்டது இதில் புற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கும் தங்களின் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் காப்பதற்கும் தாங்கள் புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்வதற்கும் அனைத்து மாணவிகளும் சபதம் ஏற்று கொண்டனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். 6 /2 /2023 இந்த நாளில் நமது திருச்சி நாகமங்கலத்தில் இயங்கி வரும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் அவர்கள் மருத்துவர் G.கோவிந்தராஜ் MBBS.,MS.,MCH.,FICS., அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் திருச்சி திருவானைக் கோவிலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பேருரை ஆற்றினார்கள் இந்த நிகழ்வில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் திருமதி லட்சுமி அவர்கள் தலைமை ஏற்க மற்றும் சோசியல் டிபார்ட்மென்ட் ஹச்ஓடி திருமதி சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்க நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் இந்த சொற்பொழிவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டு புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகளில் எவ்வாறு மாணவ மாணவிகளின் பங்குகள் அமைகின்றன என்பதை நமது எம்டி அவர்கள் தெளிவாக எடுத்துரைக்க அனைத்து மாணவர்களும் இன்றைய நாளில் புகைப்பதிலும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை எடுப்பதிலும் பிறர் பயன்படுத்தும் பொழுதும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் கண்டிப்பாக தடுப்போம் எனவும் அவரவர் பிறந்த நாட்களில் தனது தாய் தந்தைகளுக்கு தேவையான பரிசோதனைகளை பரிசாக வழங்க வேண்டும் என்ற சிறப்புரையும் ஏற்று ஒவ்வொருவரும் இந்த புற்றுநோய் தினத்தில் உறுதிமொழி மேற்கொண்டனர் பின்பு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முதல்வர் அவர்களால் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பாக நிர்வாக இயக்குனர் அவர்கள் திருமதி சித்ரா மேடம் அவர்களை கௌரவித்தார்கள் பின்பு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது இந்த நிகழ்வில் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டது சங்கரராமன் அவர்கள் சிவ அருணாச்சலம் அவர்கள் முபின் பேகம் அவர்களுக்கு நன்றி. சட்டக்கல்லூரியில் மரு.சசிப்பிரியா கோவிந்தராஜன் அவர்களின் புற்றுநோய்க்கெதிரான உரை நமது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது மருத்துவமனையில் காலை முதல் மாலை வரை அனைத்து பரிசோதனைகளும் ஸ்கேன்களும் இலவசமாக செய்வதோடு நாகமங்கலத்தில் மேற்கு நாகமங்கலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் 100 பெண்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் ஸ்கிரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது .இதில் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதற்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பாப் ஸிமியர், தெர்மோகிராம் போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் இதில் மருத்துவர் யாமினி மருத்துவர் ரேகா செவிலியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் அவர்கள் கலந்துகொண்டு இந்த முகாமினை நடத்தினார்கள் இதில் பஞ்சாயத்து நாகமங்கலம் பஞ்சாயத்தின் தலைவர் திரு வெள்ளைச்சாமி அவர்கள் தலைமை தாங்கி இந்த முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு 03.02.23 ஆகிய இன்று புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மூன்றாவது நிகழ்வாக ஒரே நாளில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் திரு.கோவிந்தராஜ் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மற்றும் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை துறையில் தங்கப்பதக்கம் வென்ற மருத்துவ நிபுணர் அவர்களும் மூன்று கல்லூரிகளில் இன்று ஒரே நாளில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றியது உண்மையில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு உரையானது எதிர்வரும் 4- தேதி புற்றுநோய் தினமாகிய அந்த நாளில் ஏற்கப்படும் சூளுரையாக அமையும் என்பது மிகையாகாது. இந்த நாளில் மாலை 3:30 மணி அளவில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் புற்றுநோய்க்கான பேருரை நிகழ்த்தினார். இதில் மூன்று இராணுவ அதிகாரிகள் தலைமையில் 120 என்சிசி ஆர்மி மற்றும் ஸ்கவுட் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர் இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான சொற்பொழிவானது மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் என்றால் என்ன என்பதை மருத்துவரின் விளக்கத்தோடு நன்கு புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் பலவிதமான வினாக்களை எழுப்பி எவ்வாறு புற்றுநோயை புரிந்து கொண்டோமோ அது போல் இந்த உலகத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சபதம் ஏற்று தங்களுக்குள்ளே whatsapp குரூப் அமைத்து அதில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளையும் புற்றுநோய் எதனால் உருவாகிறது எந்தெந்த பொருட்களை உட்கொள்வதால் வருகிறது என்பதையும் புற்றுநோய் வராமல் எவ்வாறு நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தமது குரூப்புகளில் பதிவிட்டு ஒருவர் கூட இனி புற்றுநோயால் பாதிக்க கூடாது ஆரம்ப நிலையில் கண்டுகொண்டு உலக மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வை வழங்குவோம் என்று சபதம் ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் மருத்துவர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விழா நன்றியுரைடன் இனிதே முடிவடைந்தது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 03/02/2023 அன்று நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் அமைந்துள்ள சீனிவாசன் பல் ,பொது மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புற்றுநோயும் பல் மருத்துவமும் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்கும் மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பல் மருத்துவத்துறையில் எவ்வாறு புற்றுநோய் ஒரு பெரிய அங்கம் வகிக்கிறது, அது எவ்வாறு பல் பகுதியில், தாடை பகுதியில் , கழுத்துப் பகுதியில் மற்றும் உணவு குழாய் பகுதியில் புற்று நோய்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை விளக்கினார்.இதில் பல்வேறு பல் மருத்துவத்துறையினர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கௌரவித்தார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் இத்தாலி நாட்டின் புற்றுநோய் வல்லுனருடன் நமது நிர்வாக இயக்குனர் சந்திப்பு 123456789101112131415161718192021222324252627282930 123456789101112131415161718192021222324252627282930